close
Choose your channels

சுவிட்சர்லாந்தில் விஜே விஜய்.. மனைவியுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்கள்!

Sunday, October 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரேடியோ ஜாக்கி மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான விஜே விஜய் மனைவியுடன் சுவிட்சர்லாந்துக்கு சென்றபோது எடுத்த புகைப்படங்களை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன

ரேடியோ ஜாக்கியாக இருந்து அதன் பிறகு சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து வருபவர் விஜே விஜய். தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா உள்பட பல சினிமா நிகழ்ச்சிகளை இவர்தான் தொகுத்து வழங்கியுள்ளார். அது மட்டுமின்றி பல பட்டிமன்றங்களில் இவர் கலந்து கொண்டுள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் விஜே விஜய் கடந்த 2019ஆம் ஆண்டு மோனிகா என்பவரை திருமணம் செய்த நிலையில் கடந்த ஆண்டு இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு நவிலன் என்ற தூய தமிழ் பெயரை வைத்துள்ளனர். அவ்வப்போது விஜே விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி, குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்து வருவார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் விஜே விஜய்யின் மனைவி மோனிகா, தனது கணவருடன் ஸ்விட்சர்லாந்து சென்ற போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் விஜே விஜய், ஊட்டியில குல்லா விக்குற பையன் போல் இருப்பதாகவும் அவர் காமெடியுடன் கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.