close
Choose your channels

விரைவில் பிக்பாஸ் 2: கமலுக்கு பதில் யார்?

Monday, February 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த வருடம் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய விதமும் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியால் ஓவியா, ஆரவ் உள்பட பல நட்சத்திரங்கள் புகழின் உச்சத்திற்கு சென்றனர்.

இந்த நிலையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிகிறது. அனேகமாக இவ்வாண்டு ஜூன் மாதம் பிக்பாஸ் 2 தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசன் தற்போது அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் பிசியாக இருப்பதால், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. கமல்ஹாசனுக்கு நிகராக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.