அர்னால்டுக்கு போட்டியாக களமிறங்கும் 'பாகுபலி 2' வில்லன்?
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம் மற்றும் மிகப்பெரிய வெற்றி படம் என்ற பெயர் பெற்ற 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் எஸ்.எஸ்.ராஜமெளலி ஈடுபட்டு கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில் ஷங்கரின் 'எந்திரன் 2' படத்தின் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வில்லனாக நடிக்கவிருப்பதை போல, 'பாகுபலி 2' படத்தில் ஆஸ்திரேலியாவின் WWE வீரர் நாதன் ஜோன்ஸ் வில்லன் வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
பாகுபலி 2' படத்தின் போர்க்காட்சிகளில் இவரை நடிக்க வைக்க ராஜமவுலி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் ஜெயம் ரவி, த்ரிஷா நடித்த 'பூலோகம்' படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.