close
Choose your channels

அமீர்கான் படத்தில் யோகிபாபு? அடித்தது அதிர்ஷ்டம்

Friday, September 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்கும் ஒரு படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்க உள்ளார் என்ற தகவலை அமீர்கானை சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் தெரிவித்தார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் யோகிபாபுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

சமீபத்தில் யோகிபாபு அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் தவிர மற்ற மொழிகளில் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த யோகிபாபு, ‘அமீர்கானின் இந்தி படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும்’ என்றும் அவர் கூறியுள்ளார். கோலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுடனும் இணைந்து நடித்து வரும் யோகிபாபு தற்போது பாலிவுட்டுக்கும் சென்று சென்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

மேலும் பாலிவுட்டில் நடிக்கும் முதல் படத்திலேயே முன்னணி நடிகரான அமீர்கானுடன் நடிக்க யோகிபாபுவுக்கு வாய்ப்பு கிடைத்தது பெரும் அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதி தமிழராகவே நடித்துவரும் நிலையில் அவருக்கு நண்பராக யோகிபாபு நடிக்கலாம் என கருதப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.