close
Choose your channels

ஷங்கரின் 25வது வருடம்: பாராட்டிய பிரபல இயக்குனர்கள்

Monday, April 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கடந்த 1993ஆம் ஆண்டு 'ஜெண்டில்மேன்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அவர் திரையுலகில் நுழைந்து 25 வருடங்கள் பூர்த்தியானதை அடுத்து முன்னணி இயக்குனர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இயக்குனர் மிஷ்கின் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடிய ஷங்கரை முன்னணி இயக்குனர்கள் பாராட்டினர். மணிரத்னம், மிஷ்கின், பாலாஜி சக்திவேல், பாண்டியராஜ், கவுதம் மேனன், ரஞ்சித், அட்லி, மோகன்ராஜா, சசி உள்பட பல இயக்குனர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஜெண்டில்மேன் முதல் 2.0 வரை பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவை உலக அளவுக்கு கொண்டு சென்ற இயக்குனர் ஷங்கர் திரையுலகில் இன்னும் பல சாதனைகள் நிகழ்த்த நாமும் வாழ்த்துவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.