close
Choose your channels

விஜய் ஆண்டனியின் அடுத்த 'த்ரில்' படம் குறித்த தகவல்

Monday, September 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்த 'காளி' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் 'கொலைகாரன்' மற்றும் 'திமிறு பிடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆனந்த் ரவி இயக்கத்தில் தெலுங்கில் வெளியான 'நெப்போலியன்' என்ற த்ரில் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடிக்கும் நட்சத்திரங்கள், இயக்குனர் உள்பட பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

தன்னுடைய நிழலை காணவில்லை என்று காவல்துறையில் புகார் கொடுக்கும் ஒரு இளைஞனும், இந்த புகாரை விசாரிக்க ஒரு காவல்துறை அதிகாரி எடுக்கும் முயற்சியும் தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.