close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த முக்கிய பிரபலம்!

Thursday, May 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தலைவர் 160' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மும்பையில் நடந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது. இதனையடுத்து நேற்று ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாதம் 29ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் ரஜினிகாந்தை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் சந்தித்தார். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

சில நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த சந்திப்பில் இருவரும் தமிழக அரசியல் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.