close
Choose your channels

சட்டம் என்பது நீங்கள் போடும் சட்டை அல்ல சூர்யா - தமிழ் நடிகை கருத்து!

Saturday, July 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ள புதிய ஒளிப்பதிவு சட்ட திருத்தத்திற்கு எதிராக சூர்யா உள்பட பல திரையுலகினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இது குறித்து கருத்து தெரிவிக்க நேற்றுடன் அவகாசம் முடிந்ததை அடுத்து நேற்றைய கடைசி நாளில் சூர்யா, கார்த்தி, கார்த்திக் சுப்புராஜ் உள்பட பலர் தங்களது கண்டனங்களை டுவிட்டரில் தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யாவின் டுவிட் நேற்று இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து நடிகையும் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்து கூறியிருப்பதாவது:

சட்டம் என்பது நீங்கள் விரும்பியபடி அணிய உங்கள் சட்டை அல்ல. கருத்து சுதந்திரம் நமக்குத் தேவை ஆனால் நம் தேசத்துக்கும், நமது கலாச்சாரத்துக்கும், எந்த மதத்துக்கும் எதிராகச் சென்று நமது அமைதியைக் குலைக்க அதை தவறாகப் பயன்படுத்த முடியாது. உதாரணமாக, நீங்கள் மோடி ஜிக்கு எதிராக செல்வது என்ற பெயரில், நீங்கள் இந்தியாவிற்கும் மக்களுக்கும் எதிராக செல்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் உங்கள் பொது வாழ்க்கை மற்றும் புகழுக்காக. உங்கள் பேச்சில் நல்ல நடிப்பைத் தவிர வேறு எந்த உண்மையும் இல்லை. பஞ்ச் டயலாக் பேசுவதற்கு பதிலாக உண்மைகளுடன் பேசுங்கள். 

இது திரைப்படத் துறையை எந்த வகையில் பாதிக்கிறது? விசில் மற்றும் கைதட்டல்களுக்கு இளம் மனதை சிதைப்பது முக்கியமல்ல. தேச பாதுகாப்பு முக்கியம். தேசபக்தி முக்கியமானது. உண்மை முக்கியமானது’ என்று கூறியுள்ளார். காயத்ரி ரகுராமின் இந்த கருத்துக்கு நேர்மறை மற்றும் எதிர்மறை கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

சட்டம் என்பது நீங்கள் விரும்பியபடி அணிய உங்கள் சட்டை அல்ல. கருத்து சுதந்திரம் நமக்குத் தேவை ஆனால் நம் தேசத்துக்கும், நமது கலாச்சாரத்துக்கும், எந்த மதத்துக்கும் எதிராகச் சென்று நமது அமைதியைக் குலைக்க அதை தவறாகப் பயன்படுத்த முடியாது. உதாரணமாக, pic.twitter.com/tE7nfrpm0n

— Gayathri Raguramm ?????? (@BJP_Gayathri_R) July 2, 2021

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.