close
Choose your channels

படப்பிடிப்பின் போது விபத்து: பிரபல நடிகை படுகாயம்

Wednesday, December 5, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மலையாள நடிகையும் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியுமான மஞ்சுவாரியர் சற்றுமுன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துளார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் 'ஜாக் அண்ட் ஜில்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹரிபேடு என்ற பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் மஞ்சுவாரியர் ஒரு சண்டைக்காட்சியில் நடித்தார். அப்போது அவருக்கு எதிர்பாராத வகையில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு படக்குழுவினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.