close
Choose your channels

ஜூனியர் சிரஞ்சீவி புகைப்படத்தை வெளியிட்ட மேக்னாராஜ்: அப்படியே உரித்துவைத்தால் போல் இருக்கும் குழந்தை!

Sunday, February 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆக்சன் கிங் அர்ஜுன் சகோதரரும் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஆண்டு ஜூன் மாதம் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த நிலையில் அவரது மனைவியும் நடிகையுமான மேக்னாராஜ் அப்போது நான்கு மாத கர்ப்பமாக இருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் மேக்னாராஜ்க்கு ஆண் குழந்தை பிறந்தது என்பதும் மறைந்த தனது கணவரே மீண்டும் வந்து பிறந்ததாக உருக்கமான பதிவு ஒன்றை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று அதிகாலை 12 மணிக்கு தனது மகனின் புகைப்படத்தை முதன் முதலாக வெளியிடப்போவதாக அறிவித்திருந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தையும் தந்தை சிரஞ்சீவியின் புகைப்படத்தை குழந்தை பார்ப்பது போன்று உள்ள புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது சிரஞ்சீவி சார்ஜாவை அப்படியே உரித்து வைத்தால் போல் இருக்கும் ஜூனியர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.