close
Choose your channels

தமிழ் இளம் நடிகையின் ஸ்டன்னிங் போட்டோ ஷுட்… வைரல் புகைப்படம்!

Monday, March 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சினிமாவில் பப்ளி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராஷி கண்ணா. முன்னணி நடிகையாக இருந்தாலும் அவரது உடல்வாகுவால் கிண்டலுக்கு ஆளான அவர் தற்போது கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது எடையை குறைத்து இருக்கிறார். இதையடுத்து இந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக அறியப்படுகிறார்.

தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான “இமைக்கா நொடிகள்” படத்தில் நடிகை ராஷி கண்ணா அறிமுகமானார். அதையடுத்து நடிகர் ஜெயம் ரவி நடித்த “அடங்கமறு” நடிகர் விஷால் நடித்த “அயோக்யா”, நடிகர் விஜய் சேதுபதி நடித்த “சங்கத்தமிழன்” போன்ற படங்களில் நடித்து இருந்தார். தற்போது தமிழில் 4 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்து இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் வழியாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிக நெருக்கமான ஒருவராக இருந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் சோஷியல் மீடியாவில் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா மஞ்சள் நிற உடையணிந்து எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேறு லெவல் டிரெண்டாகி உள்ளது. மேலும் இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை அள்ளித் தெளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.