ஜப்பானில் வேதாளம் ரிலீஸ் தேதி?
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் வெளியாகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அமெரிக்காவில் இதுவரை இந்த படத்திற்கு 80 திரையரங்குகள் புக் ஆகியுள்ளதாகவும், இன்னும் ஒருசில திரையரங்குகளில் பேச்சுவார்த்தை நடந்து வருவதால் மொத்தம் 90 திரையரங்குகளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதுவரை தமிழ்ப்படங்கள் வெளியாகாத போலந்து நாட்டில் முதன்முதலாக 'வேதாளம்' ரிலீஸ் ஆகிறது என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் ஜப்பானிலும் 'வேதாளம்' ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பானில் வரும் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேதாளம்' திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும், அதற்கான டிக்கெட்டுக்கள் முன்பதிவு தொடங்கிவிட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.