close
Choose your channels

பிக்பாஸ் லாஸ்லியாவின் முதல் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Saturday, September 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா நடித்த முதல் படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ஆர்மிகள் இந்த படத்தை பார்க்க தயாராகி வருகின்றனர்

பிக்பாஸ் லாஸ்யா நடித்த முதல் திரைப்படம் ஃபிரண்ட்ஷிப். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 17 என அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டு இதுகுறித்த போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். உலகம் முழுவதும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது லாஸ்லியாவின் பெயரில் டுவிட்டரில் உருவான ஆர்மிகள் தற்போது இந்த செய்தியை வைரலாக்கி வருகின்றனர்

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்சன் கிங் அர்ஜுன், லாஸ்லியா, சதீஷ், எம்எஸ் பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஜான் பால்ராஜ் என்பவர் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.