close
Choose your channels

புதுசா வந்திருக்கே ஒரு காக்கா... கஸ்தூரியை கலாய்த்த கவின்! 

Wednesday, August 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வனிதாவின் வருகை பிக்பாஸ் வீட்டில் ஒரு புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்டது போலவே நேற்று வனிதாவின் நாரதர் வேலையால் முகின் -அபிராமி பிரச்சனை எரிமலையாக வெடித்தது. ஏற்கனவே அபிராமியை வனிதா தயார் செய்து வைத்திருந்ததால் முகினிடம் எரிமலையாக வெடித்தார். அப்பாவி அபிராமியா இப்படி? என சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் ஆச்சரியம் அடைந்தனர்.

இருப்பினும் முகினுக்கு சாண்டி, கவின், தர்ஷன் ஆகியோர் முழு ஆதரவு கொடுத்தனர். அபிராமிக்கு வனிதா, ஷெரின், மதுமிதா ஆகியோர் ஆதரவு கொடுக்க சேரன் இருதரப்பிலும் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டினார். வழக்கம்போல் லாஸ்லியா எதையும் கண்டுகொள்ளாமல் மிக்சர் சாப்பிட்டு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முகினுக்கு ஆறுதல் கூறும் கவின், 'வனிதா சில நேரங்களில் நியாயமாக பேசுகிறார். அவரது பேச்சில் ஒரு அதிகார தொனி இருந்தாலும் நியாயமும் உள்ளது. மதுமிதா எந்தவித அடிப்படை புரிதலும் இன்றி பேசுகிறார். ஆனால் புதுசா வந்திருக்கே ஒரு காக்கா, அவரிடம் ஜாக்கிரதையாக இரு, இந்த பிரச்சனை குறித்து அவரிடம் பேசாதே என்று கஸ்தூரியை பங்கமாக கவின் கலாய்த்தது முகினுக்கு கூறிய அறிவுரை பார்வையாளர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

கஸ்தூரியிடம் பார்வையாளர்கள் அதிகம் எதிர்பார்த்த நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டில் சொதப்பி வருவதால் அவர் விரைவில் வெளியேற்றப்படுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.