close
Choose your channels

விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி இதுதான்.. பிரிட்டிஷ் நடிகர் தகவல்..!

Tuesday, March 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்கு பின்னர் சமீபத்தில் தொடங்கியதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் தற்போது விறுவிறுப்பாக தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பிரிட்டிஷ் நடிகர் பெனடிக்ட் கார்ரெட் தனது சமூக வலைதளத்தில் ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் மே 19ஆம் தேதி வெளியாகும் என கூறப்படும் நிலையில் இவரது டுவிட் அந்த தகவலை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

மேலும் இவர் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் நாளையுடன் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிவடைவதாகவும் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலரது நடிப்பில் உருவாகிய ’துருவ நட்சத்திரம்’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.