சிம்பு டிராப் செய்த 'கொரோனா குமார்' படத்தில் நடிப்பது இவரா? ஆச்சரிய தகவல்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பு நடிக்க இருப்பதாக ’கொரோனோ குமார்’ என்ற திரைப்பட அறிவிப்பு வெளியானது என்பதும் ஆனால் அதன் பின்னர் அந்த படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது சிம்புவுக்கு பதில் இந்த படத்தில் வேறொரு நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு நடித்த ’வென்று தணிந்தது காடு’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு அவர் ’கொரோனா குமார்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கோகுல் இயக்கும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சிம்பு இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் மற்றும் கோகுல் கைவிடவில்லை என்றும் சிம்புவுக்கு பதில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி ’கொரோனா குமார்’ திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஷ்ணு விஷால் நடிப்பில், கோகுல் இயக்கத்தில், வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே விஷ்ணு விஷால் தனது சொந்த நிறுவனத்தின் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் அடுத்தடுத்து கோகுல் இயக்கத்தில் இரண்டு படங்களில் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.