close
Choose your channels

குரு வணக்கத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய பிரபல நடிகை

Wednesday, November 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை தன்ஷிகா நேற்று தனது பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடினார். அவருக்கு கோலிவுட் திரையுலகினர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகை தன்ஷிகா தனது பிறந்த நாளை தனது சிலம்பாட்டம் குருவான பாண்டியன் மாஸ்டர் அவர்களின் இடத்தில் நேற்று கொண்டாடினார். தனது பிறந்தநாளின் முதல் நிகழ்வாக தனது குருவிற்கு வணக்கம் செலுத்திய தன்ஷிகா, அங்கு குழுமியிருந்த பல்வேறு மாவட்ட ரசிகர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடன இயக்குனர் ஸ்ரீதர் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பல்வேறு தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகர் நடிகைகள் அலைபேசி வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.ரசிகர்களின் அன்பிற்கிணங்க நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தன்ஷிகா சிலம்பாட்டம் செய்து காட்டினார். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் விருந்தளிக்கப்பட்டது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.