close
Choose your channels

தனுஷ் ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டம்: என்ன அறிவிப்பு தெரியுமா?

Sunday, February 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’அசுரன்’ மற்றும் ’பட்டாஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ’சுருளி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கி வரும் ’கர்ணன்’என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். மேலும் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள ஒரு படத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ’சுருளி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி குறித்த தகவல்இன்று வெளியாக உள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தனுஷ் ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.