close
Choose your channels

எதிர்ப்பார்ப்பு Vs உண்மை… விஜய் பட நாயகியின் பிகினி புகைப்படம் வைரல்!

Monday, July 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகஅழகி பட்டம் வென்ற நடிகை பிரியங்கா சோப்ரா தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “தமிழன்” திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார். அதற்குப் பின்னர் பாலிவுட் சினிமாவில் முன்னணி இடம்பெற்ற அவர் தற்போது ஹாலிவுட்டில் ரவுண்டு கட்டி அசத்தி வருகிறார். கூடவே சீரிஸ்களில் கவனம் செலுத்திவரும் இவர் சமீபத்தில் “சோனா” எனும் பெயரில் உணவகம் ஒன்றை நியூயார்க் நகரில் துவங்கியுள்ளார்.

இப்படி எப்போதும் படு பிசியாக இருந்துவரும் நடிகை பிரியங்கா சோப்ரா, சோஷியல் மீடியாக்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் 65 மில்லியன் ஃபாலோயர்களை இன்ஸ்டாவில் பெற்றுள்ள அவர் தொடர்ந்து, தனது புகைப்படங்களை அதில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது தனது 2 பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.

ஆனால் அந்தப் புகைப்படம் குறித்து கேப்ஷன் பதிவிட்டுள்ள அவர் எதிர்ப்பார்ப்பிற்கும் உண்மைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது எனப் பதிவிட்டு உள்ளார். அதாவது பிகினி உடையணிந்து நடிகை பிரியங்கா போஸ் கொடுக்கும்போது ஒரு தேர்ந்த மாடலைப் போன்று காட்சி அளிக்க விரும்புகிறார். உண்மையில் சிரித்துக் கொண்டு இயல்பாக இருக்கவே முடிகிறது.

இப்படி நடிகை பிரியங்கா சோப்ரா எடுத்துக்கொண்ட எதிர்ப்பார்ப்பு Vs உண்மை பிகினி புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.