'விஜய் 61' படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு தகவல்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் ஈசிஆரில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. முதல் நாளில் விஜய், ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த படப்பிடிப்பு பத்து நாட்கள் நடைபெறவுள்ளதாகவும், கதைப்படி கடந்த 1980ல் நடைபெறும் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்தகட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெறவுள்ளது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.