close
Choose your channels

தனுஷ் நாயகியுடன் பிரபல இசையமைப்பாளர்: புகைப்படம் வைரல்

Wednesday, September 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நாயகியுடன் பிரபல இசையமைப்பாளர் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தற்போது மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஏற்கனவே விஷால் நடித்த ’ஆக்சன்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய போது எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். அதில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் உள்ளது.

இந்த புகைப்படம் குறித்து ரசிகர்கள் பல கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வரும் நிலையில் ஐஸ்வர்யா லட்சுமியும் கோவிந்து வசந்தாவும் நெருங்கிய உறவினர்கள் என்றும், அதன் அடிப்படையில் ஐஸ்வர்யா லட்சுமியின் பிறந்த நாள் விழாவில் கோவிந்த் வசந்தா கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.