close
Choose your channels

விஜய்யின் உலக லோக்கல் தரடிக்கெட் பாடல். ஜி.வி.பிரகாஷ்

Sunday, October 11, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், விஜய் நடித்து வரும் அடுத்த படமான 'விஜய் 59' படத்தை இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இந்த படத்தில் அமைந்துள்ள விஜய்யின் அறிமுகப்பாடலின் வரிகளை வரும் 17ஆம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவித்திருந்தார். மேலும் இந்த பாடலின் இசை மற்றும் விஜய் டான்ஸ் குறித்து சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த பாடல் உலகலோக்கல் தரடிக்கெட் பாடலாக இருக்கும் என்றும் இந்த பாடலில் விஜய் செம டான்ஸ் ஆடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த படம் விஜய்க்கு 59 படம் என்பதும் ஜி.வி.பிரகாஷுக்கு 50 படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.