close
Choose your channels

விஜய்-அட்லி படத்தின் நாயகி-இசையமைப்பாளர் இவர்களா?

Thursday, September 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய், கீர்த்திசுரேஷ் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் விஜய்யின் 61வது படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள விஜய்யின் 61வது படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்யுடன் காஜல் அகர்வால் 'துப்பாக்கி' மற்றும் ஜில்லா' என இரண்டு ஹிட் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 'அஜித் 57' படத்திலும் காஜல் அகர்வால் நடித்து வருவதால் மேற்கண்ட தகவல் உண்மையானால் ஒரே நேரத்தில் அஜித்-விஜய்யுடன் நடிக்கும் நாயகி என்ற பெருமையை பெறுவார்.
அதேபோல் 'உதயா', அழகிய தமிழ்மகன்' படங்களுக்கு இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகுபலி கதாசிரியர் விஜேந்திரபிரசாத் திரைக்கதையில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் வெளிவரும்போது மேற்கண்ட தகவல்கள் உண்மையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.