close
Choose your channels

ஓட்டலில் சாப்பிட்டபின் குழந்தையை மறந்து வெளியே வந்த பிரபல நடிகை!

Saturday, February 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொதுவாக ஓட்டலில் சாப்பிட சென்றவர்கள் பர்ஸ், செல்போன், ஹேண்ட்பேக் உள்பட ஒருசில பொருட்களை மறந்துவிட்டு திரும்பி செல்வது வழக்கமான ஒன்றே. ஆனால் அமெரிக்க நடிகை கிம் கர்தர்ஷியான், தனது குழந்தையை ஓட்டலில் மறந்துவிட்டு திரும்பிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் கிம்கர்தர்ஷியான் ஓட்டல் ஒன்றில் இருந்து வெளியே வந்து தனது காரில் ஏற முயல்கிறார். பின் திடீரென ஏதோ ஞாபகம் வந்தவராக மீண்டும் ஓட்டலுக்குள் செல்கிறார். அவர் திரும்பி வரும்போது அவருடைய இடுப்பில் குழந்தை உள்ளது. எனவே அவர் குழந்தையை ஓட்டலில் மறந்துவிட்டு வந்தது உறுதியாகியுள்ளது

ஆனால் இந்த வீடியோ குறித்து கிம் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'என்னுடைய குழந்தையை நான் மறந்து விடவில்லை. கார் சீட் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க தான் வெளியில் வந்தேன்' என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.