close
Choose your channels

'விக்ரம்' படத்தில் ஒரு ரோலக்ஸ் சூர்யா போல்.. 'தலைவர் 171' படத்தில் இந்த மாஸ் நடிகரா?

Saturday, March 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ படத்தில் கடைசி ஐந்து நிமிடங்கள் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் வந்து சூர்யா மிரட்டிய நிலையில் ‘தலைவர் 171’ படத்திலும் ஒரு மாஸ் நடிகர் LCU கேரக்டராக வர இருப்பதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ‘தலைவர் 171’. இந்த படத்தின் டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் திரைக்கதை எழுதும் பணியில் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் நட்சத்திரங்கள் தேர்வும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு LCU கேரக்டர் அறிமுகமாக இருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அந்த கேரக்டர் சிவகார்த்திகேயன் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ‘தலைவர் 171’ திரைப்படத்தின் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக செய்தி வெளியான நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ’இதுவரை தனக்கு அழைப்பு வரவில்லை என்றாலும் ஒருவேளை அழைப்பு விடுக்கப்பட்டால் அதை ஒப்புக்கொள்வேன் என்று கூறியிருந்தார். எனவே ‘தலைவர் 171’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.