close
Choose your channels

ரஜினி ரசிகர்களுக்கு வேறு வழியே இல்லை! அமைச்சர் பாண்டியராஜன்

Saturday, February 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுகவுக்கு வாக்களிப்பதை தவிர வேறு வழி ரஜினி ரசிகர்களுக்கு இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

நேற்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'தண்ணீர் பெற்றுத்தரும் கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று தனது ர்சிகர்களுக்கு ரஜினிகாந்த் கூறியுள்ளார். அதன்படி இன்றைய நிலையில் தண்ணீர் பெற்றுத்தரும் இடத்தில் உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே! எனவே ரஜினி ரசிகர்களுக்கும் அவரது தொண்டர்களுக்கும் அதிமுகவுக்கு ஓட்டு போடுவதை தவிர வேறு வழியில்லை' என்று கூறினார்

ஏற்கனவே ரஜினி தனக்கு தானாகவே முன்வந்து ஆதரவு தரவேண்டும் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.