close
Choose your channels

விஜயகாந்துக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Sunday, September 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேமுதிக தலைவர் விஜய்காந்த் உடல்நலக்கோளாறு காரணமாக நேற்று முன் தினம் இரவு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டார். மேலும் இன்று காலை அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கும் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் விஜயகாந்த் விரைந்து உடல்நலம் பெற்று பொதுவாழ்வு பணிகளை தொடர வேண்டும் என்று மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக உள்பட எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று விஜய்காந்த் சமீபத்தில் கூறிய நிலையில் அரசியல் நாகரீகம் கருதி விஜயகாந்துக்கு திமுக தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.