சசிகுமாரின் 'நாடோடிகள் 2' படம் குறித்த சூப்பர் அப்டேட்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகிய நாடோடிகள் திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'நாடோடிகள் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் 'நாடோடிகள் 2' படத்தின் டீசர் நாளை அதாவது ஜூலை 6ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனை உறுதி செய்யும் வகையில் சற்றுமுன் டீசர் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.
சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி, நமோ நாராயணா, ஞானசம்பந்தம், சூப்பர் சுப்பராயன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ஏகாம்பரம் ஒளிப்பதிவில் கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.