close
Choose your channels

'தளபதி 63' படத்தில் நாஞ்சில் சம்பத்?

Wednesday, February 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஒரு ஆக்சன் காட்சியும், விஜய் அறிமுக பாடலின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் மார்ச் இரண்டாவது வாரம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் நாயகி நயன்தாரா இணையவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் நாஞ்சில் சம்பத் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறிய நாஞ்சில் சம்பத், 'அட்லி படத்தில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு வரும் என்று அவருடைய பி.ஆர்.ஓ கூறினார்' என்று தெரிவித்துள்ளார். அட்லி படம் என்றால் அட்லி இயக்கி வரும் 'தளபதி 63' படமா? அல்லது அட்லி தயாரிக்கும் படமா? என்ற தகவல் விரைவில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல அரசியல் தலைவரான நாஞ்சில் சம்பத் ஏற்கனவே ஆர்.ஜே.பாலாஜியின் 'எல்.கே.ஜி' படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்திலும் நாஞ்சில் சம்பத் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.