close
Choose your channels

என்றாவது ஒரு நாள் அந்த படம் ரிலீஸ் ஆகும்: நயன்தாராவின் 'கனெக்ட்' இயக்குனர்!

Sunday, December 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நயன்தாரா நடித்த ‘கனெக்ட்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ள அஸ்வின் சரவணன் இந்த படத்தை வரும் 22ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளார் என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிந்ததே.

நயன்தாரா நடித்த ’மாயா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அஸ்வின் சரவணன் அதன்பின்னர் டாப்ஸி நடித்த ’கேம் ஓவர்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் நல்ல வரவேற்பு பெற்றது. அதன்பின் அவர் இயக்கிய ‘இறவா காலம்’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் ஒருசில காரணங்களால் ரிலீசாகாமல் உள்ளது.

இதுகுறித்து அஸ்வின் சரவணன் கூறியபோது, ‘இறவாக்காலம்’ திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகிவிட்டது. தயாரிப்பாளரும் அந்த படத்தை பார்த்து திருப்தியான தகவல் கொடுத்தார். ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில் எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையும் குற்றம் சுமத்த முடியாது என்றாலும் இவ்வளவு நீண்ட நாட்களாக அந்த படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பது மிகுந்த வலியை தருகிறது. ஆனால் அதே நேரத்தில் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக அந்த படம் ரிலீஸ் ஆகி பார்வையாளர்களின் வரவேற்பைப் பெறும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.