close
Choose your channels

இது 'பீஸ்ட்' படத்தின் ஷூட்டிங் வீடியோவா? இணையதளங்களில் வைரல்!

Thursday, July 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே கலந்து கொள்ளும் பாடல் காட்சி மற்றும் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் ’பீஸ்ட்’ நாயகி பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சில நொடிகளே ஓடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை பார்க்கும் போது ’பீஸ்ட்’ படப்பிடிப்பு தளம் போல் தெரிகிறது என விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இதே இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தி கொண்ட புகைப்படத்தையும் பூஜா ஹெக்டே பதிவு செய்துள்ளார். ஊசி செலுத்தும்போது பயப்படுவதை தவிர்ப்பதற்காக புன்னகை புரிந்து செய்வதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.