close
Choose your channels

'தளபதி', 'சிவாஜி' படங்களை அடுத்த '2.0' செய்த சாதனை

Wednesday, November 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகாவின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள '2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகலில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் ஒரு புதிய சாதனையை ரிலீஸில் செய்துள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்த படம் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழ் திரையுலக வரலாற்றில் இதுவொரு புதிய சாதனையாகும். இதற்கு முன் எந்தவொரு தமிழ்ப்படமும் இத்தனை அதிகமான திரையரங்குகளில் வெளியானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த 1991ஆம் ஆண்டு ரஜினியின் 'தளபதி' திரைப்படம் உலகம் முழுவதும் முதல்முறையாக 100 திரையரங்குகளில் வெளியான சாதனையும், கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான சிவாஜி' திரைபடம் உலகம் முழுவதும் முதல்முறையாக 1000 திரையரங்குகளில் வெளியான சாதனையும் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.