close
Choose your channels

ஒரே ஒரு பாடலுக்கு ரூ.1 கோடி சம்பளம்.. ரஜினி, விஜய் பட நடிகையின் டிமாண்ட்..!

Tuesday, April 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினி, விஜய் படத்தில் நடித்த நடிகை ஒருவர் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது

சிரஞ்சீவி நடித்து வரும் தெலுங்கு படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாட ஒரு சில நடிகைகள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் தற்போது நடிகை ஸ்ரேயா சரணை படக்குழுவினர் அணுகியுள்ளதாக தெரிகிறது. இந்த ஒரே ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாட அவர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் சம்பளத்தை கேட்டு படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தாலும் அவரையே அந்த பாடலுக்கு நடனம் ஆட வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ’பத்து தல’ திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடிய நடிகை சாயிஷா மிகப்பெரிய சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. அதேபோல் ‘புஷ்பா’ படத்தில் ஒரே ஒரு குத்து பாடலுக்கு நடனமாடிய சமந்தாவுக்கும் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் ஸ்ரேயாவும் இந்த பாடலில் படு கிளாமராக நடிக்க வேண்டி இருக்கும் என்பதால் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் அதற்கு பட குழுவினர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.