close
Choose your channels

'கபாலி'யின் முக்கிய பணி இன்றுமுதல் ஆரம்பம்

Monday, April 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'மெட்ராஸ்' இயக்குனர் ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்றுமுதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.

சென்னை ஃபோர் பிரேம்ஸ் டப்பிங் திரையரங்கில் இன்று முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பகுதியின் டப்பிங்கை தொடங்கியுள்ளார்.


சமீபத்தில் இயக்குனர் ரஞ்சித் அளித்த பேட்டி ஒன்றில் ஏப்ரலில் 'கபாலி' படத்தின் டப்பிங் நடைபெறும் என்றும் அதன்பின்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

அவர் கூறியபடியே தற்போது டப்பிங் தொடங்கிவிட்டதால் மிக விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ரஜினிகாந்த் மனைவியாக ராதிகா ஆப்தே நடித்துள்ள இந்த படத்தில் தன்ஷிகா, தினேஷ், கலையரசன், கிஷோர், ஜான்விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.,தாணு பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இந்த படம் மே இறுதியில் அல்லது ஜூனில் வெளியாகும் என ஏற்கனவே ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.