close
Choose your channels

பாலியல் தொழிலாளி வேடத்தில் பிரபல நடிகை

Monday, October 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 'அன்னியன்' உள்பட ஒருசில வெற்றி படங்களில் நடித்து பிரபலமாக இருந்த நடிகை சதா, தற்போது உருவாகி வரும் 'டார்ச்லைட்' என்ற படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து வருகிறார்

இந்த படம் குறித்து இயக்குனர் அப்துல் கூறியபோது, 'நாம் பல பாலியல் தொழிலாளியின் கதைகளை கேட்டுள்ளோம். நெடுஞ்சாலைகளில் நின்று வாடிக்கையாளர்களை அழைப்பது முதல் அவர்கள் தொழிலில் இருக்கும் பல கஷ்டங்களை கேட்டும் பார்த்தும் படித்தும் இருக்கின்றோம். ஆனால் அவர்களுடைய வாழ்விலும் நாம் கேள்விப்படாத பல விஷயங்கள் இருக்கின்றது என்பதை பாலியல் தொழிலாளிகள் சிலரிடம் பேசியதில் இருந்து தெரிந்து கொண்டேன். அவர்களுடைய வாழ்க்கை முறை நம்மில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது. அவர்களிடம் இருந்து தெரிந்து கொண்ட விஷயங்களை வைத்து இந்த படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளேன்' என்று கூறினார்.

மேலும் இந்த படத்தின் பாலியல் தொழிலாளிகள் கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் தயங்கினர். ஆனால் சதா மற்றும் ரித்விகா இந்த கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டனர். ஒருசில காட்சிகள் படமாக்கும்போது ரிஸ்க்காக இருந்தாலும் சதா தன்னால் முடிந்தவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக இயக்குனர் அப்துல் கூறியுள்ளார்.

அறிமுக நடிகர்கள் உதயா, சிவசக்தி, தினேஷ் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் இயகுனர் வெங்கடேஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.