close
Choose your channels

அதிமுகவினர் போராட்டம் எதிரொலி: சர்கார் காட்சிகள் ரத்து

Thursday, November 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வரலட்சுமி கேரக்டர் மூலம் இழிவுபடுத்தியுள்ளதாகவும், தமிழக அரசின் இலவச திட்டங்களை எதிர்மறையாக விமர்சனம் செய்து மக்களை வன்முறைக்கு தூண்டியுள்ளதாகவும் அதிமுக அமைச்சர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையில் இந்த படம் திரையிடப்பட்டுள்ள சினிப்பிரியா காம்ப்ளக்ஸ் முன் இன்று மதியம் அதிமுக பிரமுகர் ராஜன் செல்லப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 'சர்கார்' படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறனை கைது செய்ய வேண்டும் என்ற கோஷம் எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் அதிமுகவினர்களின் போராட்டம் காரணமாக மதுரை அண்ணாநகரில் உள்ள சினிப்பிரியா தியேட்டர் காம்ப்ளக்ஸில் உள்ள சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா ஆகிய மூன்று திரையரங்குகளில் 'சர்கார்' படத்தின் பிற்பகல் 2.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.