close
Choose your channels

சிம்புவுடன் முதன்முதலாக இணைகிறார் ஸ்ருதிஹாசன்

Monday, February 1, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கியுள்ள 'இது நம்ம ஆளு' படத்தின் பாடல்கள் நாளை மறுநாள் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் ஒரே ஒரு பாடல் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த பாடலில் நடிக்க நயன்தாரா கால்ஷீட் தர மறுத்ததாக கூறப்படும் நிலையில், ஆண்ட்ரியா இந்த பாடலில் நடிப்பார் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி இந்த பாடலில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையானால் சிம்புவுடன் முதன்முதலாக ஸ்ருதிஹாசன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை வரும் மார்ச் மாதம் 24ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி, ஜெயப்ரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் சிம்புவின் நெருங்கிய நண்பர்களான ஜெய் மற்றும் சந்தானம் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இந்த படத்தை டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.