close
Choose your channels

சூப்பர் ஹிட் இயக்குனருடன் மீண்டும் இணையும் சிபிராஜ்

Saturday, December 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் திரையுலகில் இருந்தாலும் அவருக்கு திருப்புமுனை ஏறபடுத்திய திரைப்படம் 'நாய்கள் ஜாக்கிரதை. கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை சக்தி செளந்திரராஜன் இயக்கியிருந்தார்.

இந்த படத்தின் வெற்றியால் சிபிராஜூக்கு மட்டுமின்றி சக்தி செளந்திரராஜனுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. ஜெயம் ரவி நடித்த ''மிருதம்' மற்றும் 'டிக் டிக் டிக்' ஆகிய படங்களை அவர் இயக்கினார்

இந்த நிலையில் சிபிராஜ், சக்தி செளந்திரராஜன் வெற்றி கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது. இந்த படத்தை சத்யராஜின் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.