close
Choose your channels

உருக்கமான வேண்டுகோளுடன் 'மாநாடு' அப்டேட் தந்த சிம்பு!

Friday, January 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்த நாளை அடுத்து ‘மாநாடு’ படத்தின் டீஸர் வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இது குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்டு தனது பிறந்தநாளுக்கு யாரும் வீட்டிற்கு வர வேண்டாம் என்று உருக்கமான ஒரு வேண்டுகோளையும் வெளியிட்டுள்ளார். இந்த வேண்டுகோள் குறித்த அறிவிப்பில் சிம்பு கூறியிருப்பதாவது:

என்‌ உயிரினும்‌ மேலான ரசிகர்களுக்கு... வணக்கங்கள்‌.

எத்தனை தடைகளை நான்‌ கடந்து வந்தாலும்‌... என்னுடன்‌ என்றுமே நின்றிருக்கிறது. உங்கள்‌ பேரன்பு.

அதுதான்‌ நான்‌ அடுத்தடுத்து படங்கள்‌ தருவதற்கும்‌, உடல்‌ எடையைக்‌ குறைத்து, உத்வேகமானதற்கும்‌ மிக முக்கிய காரணம்‌.

கொரோனா காலகட்டத்திற்காக வெகு விரைவாக முடிக்கப்பட்ட ஈஸ்வரன்‌ படத்திற்கு பெரிய வரவேற்பைக்‌ கொடுத்தீர்கள்‌. வெற்றி பெறச்‌ செய்தீர்கள்‌.

உங்களை நான்‌ ரசிகர்கள்‌ என்று சொல்வதை விட எனது குடும்பம்‌ என்று சொல்வதுதான்‌ சரியாக இருக்கும்‌. உங்கள்‌ அன்பிற்கு நிறைய நன்றிக்‌ கடன்பட்டுள்ளேன்‌.

எனது பிறந்தநாளன்று நான்‌ உங்களோடுதான்‌ இருக்க வேண்டும்‌. ஆனால்‌ சில முன்‌ தீர்மானங்களால்‌ ஊரில்‌ இல்லை. வெளியூர்‌ செல்கிறேன்‌.

என்‌ குடும்பத்தினர்‌ வந்து வீட்டு முன்‌ காத்திருப்பதை நான்‌ விரும்பவில்லை. "அதனால்‌ நண்பர்கள்‌ யாரும்‌ என்‌ பிறத்தநாளன்று சந்திக்க வந்து ஏமாற்றமடைய வேண்டாம்‌.

உங்களை நேரடியாக சந்திக்கும்‌ நிகழ்வை விரைவில்‌ ஒருங்கிணைப்பேன்‌. நாம்‌ சந்திப்போம்‌.

ஒரு சிறு மகிழ்ச்சியாக என்‌ பிறந்தநாளன்று "மாநாடு" டீசர்‌ வெளியாகும்‌. மகிழுங்கள்‌. நிச்சயம்‌ இனி நமது ஆண்டாக வெற்றிகரமான ஆண்டாக இருக்கும்‌.

அனைவருக்கும்‌ அன்பும்‌... நன்றியும்‌.

இவ்வாறு சிம்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.