close
Choose your channels

விஜய்சேதுபதிக்கு இலங்கை தமிழர்கள் எதிர்ப்பா?

Friday, July 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிப்பது குறித்து கருத்து கூறிய நடிகர் விஜய்சேதுபதி, 'முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவிருப்பது உண்மைதான். 2020ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். அவரது கேரக்டரில் நடிப்பது எனக்கு பெருமையே. சர்வதேச அளவில் முத்திரை பதித்த ஒரு தமிழர் கேரக்டரில் நடிப்பது எனக்கு சவால் தான். அந்த சவாலை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றேன்' என்று தெரிவித்தார்.

மேலும் இந்த படத்திற்கு முரளிதரனே தனக்கு உதவி செய்வதாக கூறியுள்ளதாகவும், என் மீது நம்பிக்கை வைத்த அவருக்கு எனது நன்றிகள் என்றும் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.

இந்த நிலையில் முத்தையா முரளிதரன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விடுதலைப்புலிகள் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தை புறக்கணிக்க உலகெங்கிலும் உள்ள இலங்கை தமிழர்கள் கூறுவதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.