close
Choose your channels

சமுத்திரக்கனியின் 'தொண்டன்' படத்தில் இணைந்த பிரபல நடிகை

Sunday, December 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற 'அப்பா' படத்திற்கு பின்னர் அவர் நடித்து இயக்கும் அடுத்த படமான 'தொண்டன்' திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விக்ராந்த், சமுத்திரக்கனி, சூரி, தம்பி ராமையா உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் தற்போது முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை சுனைனா ஒப்பந்தமாகியுள்ளார். நீர்ப்பறவை படத்திற்கு பின்னர் சுனைனாவுக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில், ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவில், ரமேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வசுந்தரா தேவி சினி பிலிம்ஸ் நி"றுவனம் தயாரிக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.