close
Choose your channels

விஜய் 61' படத்தில் இணைந்த முக்கிய தொழில்நுட்ப கலைஞர்

Sunday, December 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'விஜய் 61' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் எடிட்டராக பணிபுரிய அந்தோணி எல்.ரூபன் தற்போது இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அட்லியின் ராஜா ராணி மற்றும் தெறி படங்களில் பணியாற்றியுள்ளார் என்பதும் தற்போது 3வது முறையாக இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 'விஜய் 61' படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதால் இதற்கான லோகேஷன் பார்க்க விரைவில் அட்லி குழுவினர் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.