close
Choose your channels

பிரபல தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சூர்யா?

Monday, March 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் தற்போது இந்திய சினிமாவில் அதிகமாக உருவாகி வருகிறது. தமிழில் கூட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகி வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம், பிரபல தொழிலதிபரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்று கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கோரூர் ராமசாமி கோபிநாத் என்ற ஜி.ஆர்.கோபிநாத் அவர்கள் ஏர் டெக்கான் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருபவர். இவர் இந்திய ராணுவத்தில் கேப்டனாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதும் இவர் ராணுவத்தில் பணிபுரிந்த காலத்தில்தான் இந்தியா-வங்கதேச போர் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சுயேட்சையாகவும், 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராகவும் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யா-சுதா இணையும் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் தொடங்கவிருப்பதாகவும், ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.