close
Choose your channels

தமிழ் நடிகையின் குழந்தைக்கு காது குத்தும் திருவிழா: வைரல் புகைப்படங்கள்!

Friday, June 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ் நடிகையின் குழந்தைக்கு காது குத்தும் திருவிழா நடந்ததை அடுத்து இது குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த், விஜய், ஜெயம் ரவி, தனுஷ், விக்ரம், உள்பட பல தமிழ் பிரபல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது .

இந்த நிலையில் அவ்வப்போது தனது கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வரும் ஸ்ரேயா, தற்போது தனது குழந்தைக்கு காது குத்தும் திருவிழா நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.