close
Choose your channels

சஞ்சய்தத் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'தல'

Thursday, September 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சஞ்சய்தத் நடித்த உள்ள பாலிவுட் படம் ஒன்றில் தல தோனி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமாகிய க தல தோனி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்கு பின்னர் இதுவரை வேறு எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. சமீபத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான தொடர் மற்றும் தற்போது நடைபெற்று வரும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் தோனி அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ராணுவத்தில் பணிபுரிந்த தல தோனி, தற்போது பாலிவுட் படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. சஞ்சய்த் முக்கிய வேடத்திலும் இம்ரான் ஹாஸ்மி நாயகியாகவும் சுனில் ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ள ஒரு படத்தில் தல தோனி குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு பின் தொடர்ந்து அவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கிரிக்கெட், ராணுவம் ஆகிய துறைகளில் பணியாற்றிய தோனி, வெள்ளித்திரையிலும் கலக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.