close
Choose your channels

'தளபதி 63' படத்தின் முழு விபரம்

Wednesday, November 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படமான 'தளபதி 63' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதன்படி இந்த படத்தை அட்லி இயக்கவுள்ளதாகவும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 'மெர்சல்', சர்கார்' படங்களுக்கு பின் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைகிறார் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான். அதேபோல் மீண்டும் ஒருமுறை பாடலாசிரியர் விவேக் இந்த படத்தில் இணைகின்றார்.

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவில், டி.முத்துராஜ் கலை இயக்கத்தில், ரூபன் படத்தொகுப்பில், அனல் அரசு ஸ்டண்ட் இயக்கத்தில் என கிட்டத்தட்ட 'மெர்சல்' படக்குழு மீண்டும் இந்த படத்தில் இணைகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகையர் விபரம் விரைவில் வெளியாகும்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.