close
Choose your channels

விஜய்-அட்லியின் 'தளபதி 63' படத்தின் கதை இதுதானா?

Thursday, March 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கதை வழக்கம்போல் அட்லியின் பழிவாங்கும் கதை என தெரிகிறது. ஊடகங்களில் உலாவி வரும் இந்த படத்தின் கதை இதுதான்:

விஜய், கதிர் இருவரும் நண்பர்கள். கால்பந்து வீரர்களான இருவரும் பின்னாளில் கால்பந்து பயிற்சியாளர்களாக மாறுகின்றனர். அப்போது கதிர் திடீரென மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அவருடைய மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்கும் விஜய், வில்லன்களை பழிவாங்குவதோடு, கதிர் பயிற்சி கொடுத்த கால்பந்து அணியை எப்படி சாம்பியன் ஆக்குகிறார் என்பதுதான் கதை என்று கூறப்படுகிறது.

விஜய்யை கலாய்த்து காதலிக்கும் நயன்தாரா போர்ஷன் ஒரு பக்கம், யோகிபாபுவின் காமெடி போர்ஷன் ஒரு பக்கம், உள்நாட்டு, வெளிநாட்டு வில்லன்களுடன் விஜய் மோதும் காட்சி இன்னொரு பக்கம் என படம் முழுவதும் பக்கா கமர்ஷியல் அம்சங்கள் உள்ளதாம்

அதேபோல் விளையாட்டு துறையில் உள்ள அரசியல் குறித்த வசனங்கள் 'மெர்சல்' போல் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது

'கில்லி' படத்தை அடுத்து விஜய் நடிக்கும் விளையாட்டு படமான இந்த படம் கில்லியை விட இருமடங்கு விறுவிறுப்புடன் செல்லும் என்று கூறப்படுகிறது.

தற்போது சென்னையில் அமைக்கப்பட்ட செட்களில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு ஏப்ரலில் ஏழு வெளிநாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.