close
Choose your channels

அமீரை கைது செய்ய வந்த காவல்துறை.. 'மக்கள் போராளி' என்ற பட்டம்.. 'உயிர் தமிழுக்கு' வீடியோ..!

Friday, March 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமீர் நடித்த ’உயிர் தமிழுக்கு’ என்ற திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் அதில் அமீரை காவல்துறையினர் கைது செய்யும் காட்சி உள்ளது என்பதும் அதுமட்டுமின்றி இந்த படத்தில் அவருக்கு ’மக்கள் போராளி’ என்ற பட்டம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் அமீர் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த வகையில் அவர் நடித்த திரைப்படங்களில் ஒன்று ’உயிர் தமிழுக்கு’ என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அமீருடன் சாந்தினி, ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, மகாநதி சங்கர், சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதம்பாவா இயக்கத்தில், வித்யாசாகர் இசையில் உருவாகிய இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் அரசியல்வாதியாக அமீர் நடித்திருக்கும் நிலையில் அவரை கைது செய்ய காவல்துறை வருகிறது. அப்போது அவர் ’பணம் பதவி புகழ் ஆகிய மூன்று எழுத்துக்களை அனுபவித்த நான், ஜெயில் என்ற மூன்றெழுதையும் அனுபவித்தால் தான் முழு அரசியல்வாதியாக முடியும் என்று கூறி காவல்துறையினரிடம் செல்கிறார். அப்போது செய்தியாளர்கள் உங்கள் கைது குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது ’தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மம் தான் வெல்லும் என்று கூறி சிரித்து கொண்டே செல்லும் காட்சியுடன் இந்த படத்தின் டீசர் நிறைவடைகிறது.

இந்த படம் அமீருக்கு ஒரு வெற்றி படமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.