close
Choose your channels

இவர் தான் தமிழ் திரையுலகின் ஷாருக்கான்; வில்லன் நடிகரை குறிப்பிட்ட வனிதா விஜயகுமார்

Sunday, July 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வில்லன் நடிகர் ஒருவரை தமிழ் திரை உலகின் ஷாருக்கான் என்று வனிதா விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகிய திரைப்படம் ’அநீதி’. இந்த படம் வரும் 21ஆம் தேதி தமிழ் தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் தெலுங்கில் இந்த படத்தை ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.

இந்த நிலையில் ’அநீதி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற போது அதில் அர்ஜுன் தாஸை புகழ்ந்த வனிதா விஜயகுமார் அவரை தமிழ் திரை உலகின் ஷாருக்கான் என்று கூறலாம் என்று தெரிவித்தார். தான் மிகைப்படுத்துவதற்காக அவரை அப்படி கூறவில்லை என்றும் ’அநீதி’ படம் வெளியானவுடன் நீங்கள் அதை உணர்வீர்கள் என்றும் தெரிவித்தார்

மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனக்கு ’அநீதி’ திரைப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை கொடுத்த வசந்த பாலன் அவர்களுக்கு நன்றி என்றும் வனிதா கூறினார்.

மேலும் துஷாரா விஜயன் ஒரு மிகச்சிறந்த நடிகை என்றும் இயக்குனர் வசந்த பாலன் அவர்கள் திரையுலகில் முக்கிய இயக்குனராக இருந்தும் கொஞ்சம் கூட அவரிடம் கர்வம் என்பது இல்லை என்றும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.