close
Choose your channels

விஜய்யை அடுத்து தனுஷூக்கும் டாட்டா காட்டிய வரலட்சுமி

Friday, September 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள வரலட்சுமி தனது பகுதிக்கான டப்பிங் பணியை சமீபத்தில் முடித்துவிட்டு அந்த படக்குழுவினர்களிடம் இருந்து விடைபெற்றார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சர்கார்' படத்தை அடுத்து தனுஷுடன் வரலட்சுமி நடித்து வந்த 'மாரி 2' படத்தின் டப்பிங் பணியையும் அவர் நேற்றுடன் முடித்துவிட்டார். எனவே 'மாரி 2' படத்திலும் அவருடைய பணி முற்றிலும் முடிந்துவிட்டது. இந்த இரண்டு படங்களும் வரலட்சுமிக்கு முக்கியமான படங்கள் என்பதும் இந்த இரண்டு பட ரிலீசுக்கு பின்னர் அவருடைய திரையுலக மார்க்கெட்டின் கிராப் கிடுகிடுவென உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

'சர்கார்', 'மாரி 2' தவிர 'சண்டக்கோழி 2', 'நீயா 2', 'வெல்வெட் நகரம்', 'கன்னி ராசி' மற்றும் 'அம்மாயி' ஆகிய படங்களிலும் வரலட்சுமி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.